10 ஆண்டுகளை கடந்த சூர்யாவின் ‘மாஸ்’ படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதை தொடர்ந்து சூர்யா 45 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. மேலும் தற்போது சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பிஸியாகியுள்ளார்.
மாஸ்
சூர்யாவின் கரியரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று மாஸு என்கிற மாசிலாமணி. முதல் முறையாக இப்படத்தில் ஹாரர் கதைக்களத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா நடித்திருந்தார். மேலும் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கியிருந்தார்.
நயன்தாரா, பிரேம்ஜி, கருணாஸ், சமுத்திரக்கனி, பிரணிதா சுபாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் படம் கடந்த 2010ம் ஆண்டு மே 29ம் தேதி திரைக்கு வந்தது.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிய நிலையில் படுதோல்வியை சந்தித்தது. நேற்றுடன் இப்படம் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நிலையில், தோல்வியை சந்தித்த மாஸு என்கிற மாசிலாமணி திரைப்படம் ரிலீஸான சமயத்தில் ரூ. 77 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் மொத்த வசூல் விவரம் ஆகும்.