ஹீரோவாக அறிமுகமாகும் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர்.. ஹீரோயின் யார் தெரியுமா

டூரிஸ்ட் பேமிலி
2025ம் ஆண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படங்களில் ஒன்று டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார்.
மேலும் இப்படத்தில் ஒரு சிறிய முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவருடைய இயக்கும் சிறந்த வரவேற்பை பெற்றாலும், அவருடைய நடிப்பையும் அனைவரும் பாராட்டினார்கள்.
ஹீரோவாகும் அபிஷன் ஜீவிந்த்
இந்த நிலையில், இயக்குநராக அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ள அபிஷன் ஜீவிந்த் தற்போது ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு Corrected Machi என தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக மலையாள சென்சேஷனல் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கவுள்ளாராம். இவர் மலையாளத்தில் வெளிவந்த நெரு, Rekhachithram, Guruvayoor Ambalanadayil ஆகிய ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்தான் இப்படத்தை இயக்கப்போகிறார். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.