ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை
சீதா-அருண் திருமண பிரச்சனை கடந்த சில வாரங்களாக இழு இழு என இழுக்கப்பட்டு இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
முத்து தனது முடிவை மாற்றி சீதாவிற்கு, அருணை திருமணம் செய்துவைக்க ஒப்புக்கொண்டதாக நேற்றைய எபிசோடில் காட்டப்பட்டது.
இன்றைய எபிசோடில், சீதா-அருண் திருமணம் பெரியவர்கள் முன்னிலையில் Fix ஆனது, இடையில் அருண் வழக்கம் போல் முத்துவை அசிங்கப்படுத்த நினைக்க அவர் அசால்டாக செம பதிலடி கொடுக்கிறார்.
இன்னொரு பக்கம் வீட்டில் முத்து சம்மதம் தெரிவித்தது குறித்து பேசப்படுகிறது, அப்போது விஜயா வழக்கம் போல் மீனாவை குறைகூறுகிறார்.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், ரோஹினி, ஸ்ருதியிடம் சென்று நான் அவசர தேவைக்கு பணம் கேட்கும் போது ரெஸ்டாரன்ட் வேலைக்காக மொத்த பணத்தை போட்டுவிட்டேன் என்றீர்கள்.
இப்போது மீனாவின் தங்கை சீதாவிற்காக 3 பவுன் செயின் வாங்கி தருவதாக சொன்னீங்க. இப்போது மீனா வேறு நான் வேறு என்று தானே பார்க்கிறீர்கள் என ரோஹினி கேட்க நீங்கள் அவசர தேவைக்கு பணம் கேட்கவில்லை, ஆண்டியின் கோபத்திற்காக தான் கேட்டீர்கள் என கூறுகிறார்.
உடனே ரோஹினி, மீனா ஒன்றும் உங்களிடம் கொடுங்க என கேட்கவில்லையே என கூற, ஸ்ருதி காசு பணத்திற்கு மீனா ஒன்றும் ஆசைப்படுபவர் இல்லை என கூறுகிறார்.