ஷாருக்கானுக்கு பதிலாக நடிக்கும் அவரது டூப்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஷாருக்கான்
இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும், ரசிகர்களால் கிங் கான் என கொண்டாடப்பட்டு வருபவர் ஷாருக்கான்.
இவர் பதான், ஜவான் என தொடர்ந்து ரூ. 1000 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கிங். இப்படத்தை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது.
ஷாருக்கானின் டூப்
திரைப்படங்களை தாண்டி பல விளம்பரங்களில் நடிகர் ஷாருக்கானை நம்மால் பார்க்க முடியும். இந்த நிலையில், குளிர்பான விளம்பரத்தில் ஷாருக்கான் நடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
ஆனால், அந்த வீடியோவில் நடித்துக்கொண்டிருப்பவர் ஷாருக்கான் கிடையாது, அவருடைய டூப். ஆம், நடிகர் ஷாருக்கான் போலவே இருக்கும் அவரது டூப்தான் இந்த குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ நீங்களே பாருங்க:
The Duplicate SRK 😮
Shah Rukh Khan’s Lookalike Ibrahim Qadri Shooting An Ad For Him?? 😱
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 12, 2026






