வேலையை காட்டிய அண்ணி.. ஆனந்தி திருமணத்தில் புது பிரச்சனை! கயல் சீரியல் இன்றைய ப்ரோமோ

சன் டிவி யின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது சிங்கப்பெண்ணே. தற்போது இந்த சீரியலில் ஆனந்தி திருமணம் பற்றிய ட்ராக் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முதலில் நான் படிக்கவேண்டும், திருமணம் வேண்டாம் என அடம்பிடித்து வந்த ஆனந்தி கூட ஒருவழியாக குடும்பத்திற்காக தன் முடிவை மாற்றிக்கொண்டார்.
மீனாட்சியின் குடும்பம் கயல் வீட்டுக்கு வந்து திருமண தேதியை உறுதிசெய்துவிட்டு போய்விடுகிறார்கள்.
வேலையை காட்டிய அண்ணி
அதன்பின் திருமண செலவுக்கு பணம் என்ன செய்வது என கயல் வருத்தப்படுகிறார். இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கிறது, அதற்குள் செய்முறைக்கு பணம் வேண்டுமே என சொல்கிறார்.
அதன் பின் மூர்த்தி உள்ளே சென்று பீரோவில் தான் ஹோட்டல் வருமானத்தில் சேர்த்து வைத்த பணம் எங்கே என பார்க்கிறார். ஆனால் அந்த பணம் அங்கே இருக்காது என அவர் மனைவி வந்து சொல்லி ஷாக் கொடுக்கிறார்.
ப்ரோமோவை பாருங்க.






