வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா?.. வெளிவந்த உண்மை தகவல்

வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா?.. வெளிவந்த உண்மை தகவல்


சிம்பு – வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் ஒரு பிரபலம் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளியானது.

இப்படத்தில் கமல், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அடுத்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49-வது படத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது எனவும், சிம்பு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா?.. வெளிவந்த உண்மை தகவல் | Silambarasan Vetrimaaran Movie Details

டிராப் ஆனதா?

இந்நிலையில், கோலிவுட் வட்டாரத்தில் சிம்பு வெற்றிமாறன் இணையும் இந்த படம் டிராப் ஆனதாக பேச்சு அடிபட தொடங்கியது.

தற்போது, இதற்கு வலைப்பேச்சு குழு விளக்கம் அளித்துள்ளது.

அதில், அப்படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால் ஷுட்டிங் தாமதமாகி உள்ளதாகவும், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.  

சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப் ஆனதா?.. வெளிவந்த உண்மை தகவல் | Silambarasan Vetrimaaran Movie Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *