வெட்கக்கேடு! சிவகார்த்திகேயன் ஹிட் பாடலை தாக்கி பதிவிட்ட ஜேம்ஸ் வசந்தன்

நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் அசிங்கம். இதில் சிவகார்திகேயன் – ஸ்ரீதிவ்யா கெமிஸ்ட்ரி, சூரி – SK காமெடி என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தில் வரும் ஊதா கலர் ரிப்பன் பாடலும் பெரிய ஹிட். இந்த பாடல் பற்றி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.
நீலநிற ரிப்பன் வைத்து ஆடுகிறார்..
ஏதோ ஒன்றைத் தேடும்போது “ஊதா கலர் ரிப்பன்” என்ற பாடல் காட்சி தற்செயலாக கண்ணில் பட்டது.
“ஊதா கலர்” என்று சிவகார்த்திகேயன் நீலநிற ரிப்பனை கையில் வைத்துக்கொண்டுப் பாடுகிறார்.
தமிழறியாத ஒரு படைப்புக்கூட்டம் சேர்ந்தமர்ந்து இப்படி ஒரு தவறான தகவலை ஒரு தலைமுறைக்குக் கற்பித்துவிட்டு சென்றுவிட்டது.
வெட்கக்கேடு! இதைப்பார்த்த கோடிக்கணக்கான மக்கள் ‘ஊதா என்பது நீலம்’ என்றுதானே தவறாக விளங்கிகொண்டிருப்பார்கள்? குழந்தைகளின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.
ஊதா என்பது சிவப்பும் நீலமும் கலந்த கத்தரிக்காய் நிறம். Purple அல்லது Violet.
இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு இருக்கிறார்.