விவாகரத்து உண்மைதானா.. தனியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஹன்சிகா! வைரல் வீடியோ

நடிகை ஹன்சிகா மோத்வானி இரண்டு வருடங்களுக்கு முன்பு சொஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்கள் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஹன்சிகா தனது கணவர் போட்டோக்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டார் என்பதால் விவாகரத்து செய்தி உண்மைதானா என ரசிகர்கள் எல்லோரும் கேட்டு வருகிறார்கள். இருப்பினும் ஹன்சிகா இதுவரை அது பற்றி வாய்திறக்கவில்லை.
தனியாக வந்த ஹன்சிகா
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஹன்சிகா கணவர் இல்லாமல் தனியாக கொண்டாடி இருக்கிறார் ஹன்சிகா.
அவர் தனியாக வந்து விநாயகர் சிலையை எடுத்து செல்லும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.