விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்…

பூங்காற்று திரும்புமா
கடந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் பூங்காற்று திரும்புமா.
முத்தழகு சீரியல் புகழ் ஷோபனா கதாநாயகியாக நடித்த இந்த தொடரில் சமீர் அகமது நாயகனாக நடித்து வந்தார். இவர்களுடன் ஆனந்தபாபு, ஷியாம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள்.
கணவனால் சந்தேகப்பட்டு துன்புறுத்தப்படும் ஒரு பெண் அவனுக்கு தக்க பதிலடி கொடுத்து தன்னை எப்படி நிரூபிக்கிறார் என்பதை பற்றிய கதையாக அமைந்தது.
கிளைமேக்ஸ்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலை தற்போது முடித்துள்ளனர். ஆரம்பித்த வேகத்தில் சீரியலை முடிக்கிறார்கள், இது சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்தது.
தற்போது சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ போட்டோஸ்,






