விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள்

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள்

ஹார்ட் பீட் சீசன் 2

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் ஹார்ட் பீட். இந்த வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 இந்த ஆண்டு தொடங்கியது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Heart Beat Season 2 Web Series Comes To End

ரீனா என்கிற பெண், தனது தாய் தந்தை யார்? தன்னை ஏன் அனாதையாக விட்டார்கள் என்கிற கேள்விக்கு பதில் தேடும் கதையாக ஹார்ட் பீட் துவங்கியது. வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று நான்கு எபிசோட்கள் ரிலீஸ் ஆகிறது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Heart Beat Season 2 Web Series Comes To End

இந்த வெப் சீரிஸில் வரும் ரீனா, ரதி, அர்ஜுன், தேஜு, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கி வருகிறார்கள். மேலும், தீபக் சுந்தர்ராஜன் இந்த வெப் சீரிஸின் எழுத்தாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Heart Beat Season 2 Web Series Comes To End

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலஸில் வரும் ஒவ்வொரு வெப் சீரிஸும் 100 எபிசோட்கள் உடன் முடிவடையும். அதன்படி, ஹார்ட் பீட் வெப் சீரிஸ் சீசன் 2 இதுவரை 92 எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Heart Beat Season 2 Web Series Comes To End

முடிவு

இந்த நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்ற செய்தி வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கடைசியாக வெளிவந்த 92வது எபிசோடில் கதாநாயகி ரீனா தனது தந்தை யார் என்பதை பற்றி அறிந்தவுடன், அதை இவ்வளவு நாள் தன்னிடம் சொல்லாமல் அனைவரும் மறைத்து விட்டார்களே என்கிற அதிர்ச்சியிலும், ஏமாற்றத்திலும் இருந்த சமயத்தில் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருடைய நிலமை என்னவாக போகிறது? இனி வரும் எபிசோடில் என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் ரீனா.. முடிவுக்கு வந்த ஹார்ட் பீட் வெப் சீரிஸ்.. வருத்தத்தில் ரசிகர்கள் | Heart Beat Season 2 Web Series Comes To End

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *