விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் சிக்மா ஓடிடி ரிலீஸ் தேதி!
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன படம் சிக்மா. கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படம் திரைக்கு வந்திருந்தது.
லைகா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து இருந்த இந்த படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல இடங்களில் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தனர். சஞ்சய் மற்ற மொழி மீடியாவுக்கு பேட்டிகளும் கொடுத்திருந்தார்.
இருப்பினும் கலவையான விமர்சனங்கள் தான் சிக்மாவுக்கு தியேட்டர் ரிலீஸின்போது கிடைத்தது.
ஓடிடி ரிலீஸ் தேதி
இந்நிலையில் சிக்மா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நெட்பிலிக்ஸ் தளத்தில் வரும் அக்டோபர் 30ம் தேதி சிக்மா ரிலீஸ் ஆகிறது.
