விஜய் டிவியின் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை… யாரு பாருங்க, போட்டோ இதோ

மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் படு மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
அப்பாவை இழந்த 4 அக்கா-தங்கைகளின் கதையாக இந்த தொடர் ஆரம்பமாக இப்போது Vika ஜோடியின் கதை ஹைலைட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய்-காவேரி இருவரும் வெண்ணிலாவால் பிரிந்து இருக்க அவர்களை சுற்றியே கதை நகர்கிறது.
கதையில் வெண்ணிலா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சூடு பறக்க ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய என்ட்ரி
தற்போது கதையில் புதிய என்ட்ரியாக விஜய்யின் தாயார் Flashback கதையாக வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அம்மாவாக பிரபல நடிகை ஸ்ருதி ஷண்முகம் நடிக்கிறார் என கூறப்படுகிறது.