விஜய் டிவியின் புதிய சீரியல் மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம்.. முழு விவரம்

சீரியல்கள்
தமிழ் சின்னத்திரையில் தெலுங்கு சீரியல்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம்.
தெலுங்கில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த சீரியல்கள் தமிழில் அதிகம் ரீமேக் ஆகிறது. அப்படி இப்போது ஒரு சீரியல் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.
என்ன தொடர்
தெலுங்கில் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடிந்த சீரியல் Maguva O Maguva. இந்த தொடர் தான் இப்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.
விஜய் டிவி
மகளே என் மருமகளே என்ற பெயரில் ரீமேக் ஆக இதில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ரேஷ்மா, நீ நான் காதல் சீரியல் புகழ் வர்ஷினி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
நாயகனாக நடிகரும், நடன கலைஞருமான அவினாஷ் அசோக் நடிக்கிறார்.
இந்த தொடரின் புரொமோக்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.