விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் அய்யனார் துணை சீரியல் TRP ரேட்டிங்.. இதோ பாருங்க

அய்யனார் துணை
மக்களால் ரசிக்கப்படும் சின்னத்திரை சீரியல்களில் ஒன்று அய்யனார் துணை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மதுமிதா, அரவிந்த், முனாஃப் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த வாரம் அய்யனார் துணை சீரியலில், பல்லவன் நடேசனின் மகன் இல்லை என்கிற உண்மை வெளிவந்தது. இந்த உண்மையை அறிந்த நிலா மற்றும் சேரன், இது பல்லவனுக்கு தெரியக்கூடாது என முடிவு செய்துள்ளனர்.
ஆனால், பல்லவனோ தனது அம்மா வீட்டை விட்டு சென்றதற்கு நடேசன்தான் காரணம் என அவர் மீது கோபம் கொண்டு, செத்துப்போ என கூற, பல்லவனை அடித்து விடுகிறார் நிலா. இதனால் கோபித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார் பல்லவன்.
பின் நிலா போன் கால் செய்து பல்லவனிடம் பேசியதும் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார்.
இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
TRP
இந்த நிலையில், அய்யனார் துணை சீரியலின் கடந்த வாரம் TRP ரேட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அய்யனார் துணை 8.69 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.






