விஜய் டிவியின் சீரியல்களிலும் மகா சங்கமம் நடக்கிறதா?.. வெளிவந்த நாயகிகளின் போட்டோ

சன் டிவி
கடந்த சில நாட்களாகவே சன் டிவியின் ஹிட் சீரியல்களின் மகா சங்கமம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது.
அதற்கு ஏற்றது போல் தற்போது மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடரின் மகா சங்கமம் புரொமோ வெளியாகி இருக்கிறது, ரசிகர்களும் இந்த எபிசோடுகளை காண ஆர்வமாக உள்ளனர்.
இந்த 2 சீரியல்கள் மகா சங்கமம் முடிந்த கையோடு இன்னும் 4 சீரியல்களின் மகா சங்கமம் நடக்க இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
விஜய் டிவி
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் நாயகிகள் ஒன்றாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் டிவியிலும் மகா சங்கமம் வரப்போகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சின்ன மருமகள் சீரியல் நாயகியும், பாக்கியலட்சுமி சீரியல் புகழ் பாக்கியாவும் எடுத்த போட்டோ தான் வெளியானது, ஆனால் இது சாதாரணமாக எடுத்த போட்டோ என்றும் மகா சங்கமம் இல்லை என்றும் கூறப்படுகிறது.