விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் எங்கே சென்றுள்ளார் பாருங்க… போட்டோ இதோ

நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்.
தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னை மெழுமேற்றி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் எதைக்கண்டும் துவண்டு போகாமல் கடின உழைப்பால் முன்னேறினார்.
இப்போது இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகராக இருக்கிறார், ஆனால் தனக்கு வெற்றி கொடுத்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என சினிமாவில் நடிப்பதை நிறுத்தி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
ஆனால் சினிமா களத்தை விட அரசியல் களத்தில் அவர் நிறைய எதிர்க்கொள்ள வேண்டும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
ஜேசன் சஞ்சய்
சினிமாவில் இருந்து வெளியேற விஜய் முடிவு செய்த நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். நாயகனாக நடிப்பார் என்று பார்த்தால் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் சுதீப் கிஷனை வைத்து Sigma என்ற படத்தை இயக்கி வருகிறார், படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் ஈரோடு சென்றுள்ளார், அங்கு ஒரு நிறுவன ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






