விஜய்யின் கோட் படத்தின் மொத்த வசூலையும் தாண்டிய குபேரா.. வேற லெவல் கலெக்ஷன்

குபேரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தனுஷ் நடிப்பில் கடந்த 20ம் தேதி வெளிவந்த படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
கோட் படத்தை தாண்டிய குபேரா
இந்த நிலையில், குபேரா திரைப்படம் தெலுங்கில் மட்டுமே இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் தளபதி விஜய்யின் கோட் படத்தின் வசூலை தாண்டியுள்ளது குபேரா. விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கோட் படம் தெலுங்கில் ரூ. 13 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.