விஜய்யின் குஷி படத்தை தொடர்ந்து ரீ- ரிலீஸாகும் அஜித் திரைப்படம்.. தல தீபாவளி தான்!

விஜய்-ஜோதிகா
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் குஷி. விஜய்-ஜோதிகா ஜோடியாக நடித்த இப்படம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படம் ஆகும்.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார், படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.
ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் 25ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
அஜித்
இந்நிலையில், தற்போது அஜித்தின் அட்டகாசம் படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தீபாவளி முன்னிட்டு அடுத்த மாதம் 31- ம் தேதி வெளியாக உள்ளது. இதனால், தல மற்றும் தளபதி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.