விஜயா தர்மஅடி வாங்கியதை பார்த்த முத்து, அடுத்து நடந்தது?… சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்

சிறகடிக்க ஆசை
சட்டமன்ற தேர்தல் பரபரப்பை தாண்டி இப்போது சின்னத்திரை ரசிகர்களுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் தேர்தல் தான் பரபரப்பாக செல்கிறது.
மீனாவை பூ சங்க தேர்தலில் போட்டியிட கூடாது என சிந்தாமணி பல வேலைகள் செய்கிறார். முதலில் இலவசமாக பொருள் கொடுத்தார், மீனாவை ஆள் வைத்து கத்தி குத்த வைத்து மிரட்டினார்.
ஆனால் மீனா அதற்கும் அடிபணியவில்லை என்பதால் அடுத்த பிளானை போட ஆரம்பித்துவிட்டார் சிந்தாமணி.
எபிசோட்
இன்றைய எபிசோடில், முத்து புகார் கொடுத்ததால் போலீஸ் சிந்தாமணி வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால் அவரோ நான் இதையெல்லாம் செய்யவில்லை அவங்க மேல அனுதாப ஓட்டு வரவேண்டும் என்பதற்காக தான் அவர்களே ஆள் செட் பண்ணி இப்படியெல்லாம் செய்திருக்கிறார் என மாற்றி கூறுகிறார்.
சிந்தாமணி தேர்தலில் ஜெயிக்க செய்யும் வேலைகளை பார்த்த அவரது மகள் ரேகா, நீ கண்டிப்பாக தோற்கத்தான் போற என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அதோடு மீனா தோழிகள், உனக்கு சப்போர்ட் செய்யும் பலரை சிந்தாமணி டார்ச்சர் செய்து வருகிறார், எனது மகனை போலீஸில் சிக்க வைத்துவிட்டார் என்கின்றனர்.
இதனால் மீனா என்னால் உங்களுக்கு தான் பிரச்சனை என கூற அவர்கள் பார்த்துக் கொள்வோம் நீ வாபஸ் வாங்காதே என்கிறார்கள்.
கடைசியாக ரோட்டில் மீனா தோழிகள் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள், அதைப்பார்த்த விஜயா கிழிக்கிறார், யாரும் பார்க்க கூடாது என முக்காடு போட்டுக் கொண்டு கிழிக்கிறார்.
போஸ்டர் கிழிப்பவரை பார்த்த மீனா தோழிகள் விஜயாவை பிடித்து செம அடி அடிக்கிறார்கள், கட்டையால் முதுகில் அடிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து விஜயா ஓடும்போது முத்து பார்த்துவிடுகிறார்.
பின் முத்து மீனா தோழிகளை நிறுத்தி நடந்ததை கேட்டு சரி கிழித்தவரை அடித்தது போதும் விடுங்கள் என்கிறார்.






