விஜயகாந்த் பட தயாரிப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

விஜயகாந்த் பட தயாரிப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்


ஆனந்தி பிலிம்ஸ் வி. நடராஜன்

தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆனந்தி பிலிம்ஸ் வி. நடராஜன். இவர் கேப்டன் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தை தயாரித்துள்ளார்.

விஜயகாந்த் பட தயாரிப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Vijayakanth Movie Producer V Natarajan Death

மேலும் ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல், பிரபு நடித்த உத்தம புருஷன், சத்யராஜ் நடித்த பங்காளி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை படங்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் மரணம்

70 வயதாகும் தயாரிப்பாளர் வி. நடராஜன் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில், மாரடைப்பு ஏற்பட்டு இவர் மரணமடைந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் பட தயாரிப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | Vijayakanth Movie Producer V Natarajan Death

இவருடைய மரணம் திரையுலகில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மறைந்த தயாரிப்பாளர் வி. நடராஜனுக்கு ஜோதி என்கிற மனைவியும், செந்தில் – விக்கி என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *