வசூல் வேட்டையில் ரன்வீர் சிங்கின் துரந்தர்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

துரந்தர்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் நடிப்பில் கடந்த 2025 டிசம்பர் மாதம் துரந்தர் படம் வெளிவந்தது. இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
நாளுக்கு நாள் துரந்தர் திரைப்படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. 2025ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்த பிறகும், தொடர்ந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துரந்தர் படம் உலகளவில் இதுவரை ரூ. 1200 கோடி வசூல் செய்துள்ளது.






