லியோ படத்தின் மொத்த வசூலையும் காலிசெய்த குபேரா.. வசூல் வேட்டையில் தனுஷ்

குபேரா
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த குபேரா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இதுவரை மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் இப்படம் கடந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது.
வசூல் வேட்டையில் தனுஷ்
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் தெலுங்கில் இருந்து மட்டுமே ரூ. 39 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதன்மூலம் விஜய்யின் லியோ படத்தின் தெலுங்கு வசூலை மொத்தமாக காலிசெய்துள்ளது குபேரா.
ஏனென்றால் லியோ திரைப்படம் தெலுங்கில் மொத்தமாக ரூ. 38 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. அந்த வசூலை மூன்றே நாட்களில் இப்படம் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.