லாபம் கொடுத்துள்ள சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 7 நாள் மொத்த வசூல்.. செம கலெக்ஷன் தான்

ரெட்ரோ படம்
இந்த வருடத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்களில் ஒன்றாக உள்ளது சூர்யாவின் ரெட்ரோ.
கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான கங்குவா சரியான ஹிட் பெறவில்லை, எனவே இந்த ரெட்ரோ படம் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பு வைத்தனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி இப்படம் செம மாஸாக வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 70 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 80 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
7 நாள் முடிவில் ரெட்ரோ படம் ரூ. 87 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். படம் லாபத்தை எட்ட நடிகர் சூர்யா ரெட்ரோ பட லாபத்தில் இருந்து ரூ. 10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.
சூர்யாவின் இந்த உயர்ந்த குணத்தை ரசிகர்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்.