லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ள டூரிஸ்ட் பேமிலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ள டூரிஸ்ட் பேமிலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா


டூரிஸ்ட் பேமிலி

சசிகுமார் – சிம்ரன் இணைந்து நடிக்க, அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

குட் நைட், லவ்வர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி ஹாட்ரிக் வெற்றியை அவர்களுக்கு தேடி தந்துள்ளது. மேலும் மாபெரும் லாபத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளது.

லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ள டூரிஸ்ட் பேமிலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Tourist Family Worldwide And Tamilnadu Collection

இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், பகவதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதநேயம் பற்றி பேசிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.

வசூல் விவரம்

இந்த நிலையில், வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ள டூரிஸ்ட் பேமிலி.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Tourist Family Worldwide And Tamilnadu Collection

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 71 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 53 கோடி வசூலை அள்ளியுள்ளது. இதுவே இப்படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் ஆகும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *