ரெய்ட் 2 : திரை விமர்சனம்

ரெய்ட் 2 : திரை விமர்சனம்


அஜய் தேவ்கன், ரிதேஷ் தேஷ்முக் நடிப்பில் வெளியாகியுள்ள ரெய்ட் 2 இந்தி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்.

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review

கதைக்களம்



இன்கம்டேக்ஸ் கமிஷனரான அஜய் தேவ்கன் ராஜஸ்தானில் செல்வாக்கான குல்தீப்பின் வீட்டில் ரெய்ட் நடத்துகிறார்.

அதில் கைப்பற்றிய தங்கம், பணம் உள்ளிட்ட பொருட்களை சீஸ் செய்து கொண்டு போகிறார் அஜய் தேவ்கன்.



அப்போது அந்த செல்வந்தரின் ஆள் அஜய் தேவ்கனை சந்தித்து லஞ்சம் கொடுப்பதாக கூற, அவர் 2 கோடி கேட்கிறார்.

சரி என பணத்தை அவர் கொண்டுவர செல்ல, இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review

அப்போதுதான் ஹவலா பணம் ரிதேஷ் தேஷ்முக்கிடம் இருந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.

எனவே அவரிடம் இருக்கும் கருப்புப் பணத்தை கைப்பற்ற போதிய ஆதாரங்களை திரட்டும் அஜய், போஜ் நகருக்கு டிரான்ஸ்பராகி சென்று மத்திய அமைச்சரான ரிதேஷ் வீட்டில் சோதனை நடத்துகிறார்.


ஆனால் அவரால் அங்கு எதையும் கைப்பற்ற முடியவில்லை. தனக்கு கிடைத்த தகவல்களின்படி இருந்தது எல்லாம் மாற்றப்பட்டிருக்கிறது.

இதனால் சஸ்பென்ட் செய்யப்படும் அஜய் தேவ்கன் எப்படி ரிதேஷிடம் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு எப்படி அவரை குற்றவாளி என நிரூபித்தார் என்பதே மீதிக்கதை. 

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review

படம் பற்றிய அலசல்



2018ஆம் ஆண்டில் வெளியான ரெய்ட் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகியுள்ளது.

அமல் பட்நாயக் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் மிடுக்கான அதிகாரியாக நடித்து அசத்தியுள்ளார்.


சஸ்பென்சனில் இருந்துகொண்டே அஜய் தேவ்கன் ரெய்ட் செய்தும் காட்சிகள் அசர வைக்கின்றன. 1989யில் நடக்கும் கதை என்பதை நம்பவைக்கும் வகையில் ஆர்ட் ஒர்க் அமைந்துள்ளது.

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review

முதல் பாகத்தின் வில்லனான சௌரப் சுக்லா வரும் பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

அதேபோல் அமித் சியல் காமெடியில் அட்டகாசம் செய்துள்ளார். அவர் கொடுக்கும் ட்விஸ்ட் கலகலப்பு.

படத்தின் திரைக்கதை எங்கும் தொய்வில்லாமல் செல்கிறது.

ராஜ்குமார் குப்தா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

வாணி கபூருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். அமித் திரிவேதியின் பின்னணி இசை திரைக்கதை வேகத்திற்கு வலுசேர்க்கிறது. 

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review

க்ளாப்ஸ்



கதைக்களம்



திரைக்கதை


கேரக்டர் ட்விஸ்ட்ஸ்



பல்ப்ஸ்



பெரிதாக ஒன்றுமில்லை


மொத்தத்தில் பீரியட் திரில்லராக என்டர்டைன் செய்திருக்கிறது இந்த ரெய்ட் 2. 

ரெய்ட் 2 : திரை விமர்சனம் | Raid 2 Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *