ரிலீஸ் நேரத்தில் பிரச்சனையை சந்திக்கும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்..

ரிலீஸ் நேரத்தில் பிரச்சனையை சந்திக்கும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம்..


பராசக்தி

தமிழ் சினிமாவில் பராசக்தி என்று சொன்னதுமே முதலில் நியாபகம் வருவது சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படம் தான், அதிலும் அதில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சி இன்னும் ஹைலைட்.

தற்போது அதே பெயரில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடிக்க புதிய படம் தயாராகியுள்ளது.

பராசக்தி படத்தின் கதை 1960 காலகட்டங்களில் அன்றைய மதராஸ் மாகாணத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

சிவகார்த்திகேயனுக்கு இப்படம் 25வது படமாக அமைய ஜி.வி.பிரகாஷிற்கு இது 100வது படம்.
இப்படத்தை தயாரித்துள்ள டான் பிக்சர்ஸ் அதிகப்படியான பணத்தை செலவு செய்து உருவாக்கி உள்ளார்களாம்.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றாக கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாஸாக நடந்தது.

பிரச்சனை

பராசக்தி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜனவரி 10, 2026 படம் ரிலீஸ் என தேதி அறிவித்த நிலையில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பராசக்தி படத்தின் அதிக காட்சிகளை நீக்க தணிக்கைக்குழு வலியுறுத்தியதால் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை படக்குழு அனுப்பியுள்ளார்களாம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளதால் தணிக்கைக் குழு கட் வழங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *