ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவர்தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ராஜ்கமல் நிறுவனம்

ரஜினி 173
கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் ‘ரஜினி 173’.
இப்படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், அவர் திடீரென வெளியேறிவிட்டார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.
அடுத்ததாக யார் இப்படத்தை இயக்கப்போகிறார் என்கிற கேள்வியும் எழுந்த நிலையில், இன்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் அறிவிப்பு
அதன்படி, ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கப்போகிறார் என ராஜ்கமல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அனிருத் இசையமைக்கும் இப்படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ:
Every HERO has a FAMILY#Arambikalama #Thalaivar173 #SuperStarPongal2027 @rajinikanth @ikamalhaasan @Dir_Cibi @anirudhofficial #Mahendran @APIfilms @homescreenent@RKFI @turmericmediaTM @magizhmandram
Promo music : in-house pic.twitter.com/8s954ZIHUM
— Turmeric Media (@turmericmediaTM) January 3, 2026






