ரஜினி கெரியரில் முதல் முறையாக நடிக்கும் ரோல்.. ரஜினி173 படம் பற்றி கசிந்த தகவல்

நடிகர் ரஜினியின் அடுத்த படமான ரஜினி173 படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
தற்போது இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொடங்க இருக்கும் ஷூட்டிங்கிற்காக செட் போடும் பணிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டராக ரஜினி?
ரஜினி173 படத்தில் சூப்பர்ஸ்டார் டாக்டராக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் நடத்தி இருக்கின்றனர்.
ரஜினி தனது கெரியரில் முதல் முறையாக டாக்டர் ஆக நடிக்கிறார். இதற்கு முன் சந்திரமுகி படத்தில் ரஜினி மனநல மருத்துவராக மட்டும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






