ரஜினியின் கூலி படத்தை பார்த்து மனைவி லதா சொன்ன விஷயம்..

ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது, இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் உருவாகியுள்ளது.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி (நாளை) திரையரங்கில் வெளியாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் அமீர் கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
லதா கருத்து
படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், தற்போது கூலி படத்தை பார்த்து ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினியின் டாப் படங்களில் கூலியும் ஒன்றாக இருக்கும்’ என லதா தெரிவித்துள்ளார்.