ரசிகர்களின் அந்த செயல், சங்கடத்தில் தொகுப்பாளினி டிடி..

திவ்யதர்ஷினி
தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி முன்பு போல் தற்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. குறிப்பாக காஃபி வித் டிடி நிகழ்ச்சியை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள்.
உடல்நலன் காரணமாக அவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். ஆனால், அவ்வப்போது படங்களில் இசை வெளியிட்டு விழாவை டிடி தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் அவ்வப்போது Youtube பேட்டிகளிலும் டிடி-யை காணமுடிகிறது.
சங்கடத்தில் தொகுப்பாளினி டிடி
இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் பேசிய டிடி, “தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கும் ஈசியாக போய்விட முடியாது. பொது வெளியில் பார்க்கும் மக்கள் திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார்கள். அது எனக்கு ரொம்ப சங்கடமாக இருக்கும். எதற்கு இப்படி செய்கிறார்கள் என எனக்கு புதியவே இல்லை” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “பேருந்து, ஆட்டோ போன்றவற்றில் பயணம் செய்ய ஆசையாக இருந்தாலும், அதை தவிர்க்க வேண்டி உள்ளது. ஆனால், வெளிநாட்டில் அப்படி இல்லை, நம்மை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்” என கூறியிருக்கிறார்.