மோசமான விமர்சனங்கள், வசூலில் அடிவாங்கிய ராஜா சாப்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ராஜா சாப்
முன்னணி நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் தி ராஜா சாப். ஹாரர் ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்கியிருந்தார்.
மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், சஞ்சய் தத், விடிவி கணேஷ் என பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வசூல்
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் முதல் நாளை தவிர அடுத்தடுத்த நாட்களில் இப்படம் வசூலில் சரிவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், நான்கு நாட்களை கடந்திருக்கும் ராஜா சாப் இதுவரை உலகளவில் ரூ. 170 கோடி வசூல் செய்துள்ளது. இதில் முதல் நாள் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் வந்தது, அதன்பின் குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






