மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறா?.. ஓப்பனாக சொன்ன இயக்குநர்!

மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறா?.. ஓப்பனாக சொன்ன இயக்குநர்!


மெய்யழகன்

தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது மெய்யழகன் திரைப்படம். இயக்குநர் பிரேம் குமார், 96 திரைப்படத்தை தொடர்ந்து மெய்யழகன் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார்.

இப்படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் சூர்யாவின் 2டி entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.

மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறா?.. ஓப்பனாக சொன்ன இயக்குநர்! | Karthi Movie Director Open About The Movie

இயக்குநர் ஓபன்! 

இந்நிலையில், மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறு என்று இயக்குநர் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள், தமிழில் எடுத்ததுதான் நான் செய்த தவறு என்று என்னிடம் பலர் கூறினார்கள்.

இருப்பினும், இப்படம் OTTல் வெளியாகி எனக்கு பாராட்டுகள் கொடுத்து விட்டது. பைரசியை விட மிகப் பெரிய அச்சுறுத்தலாக ரிவ்யூவர்களை பார்க்கிறேன்.

அவர்களுக்கு மன ரீதியான பிரச்சனை இருக்கிறது, இதைச் சொல்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.    

மெய்யழகன் படத்தை தமிழில் எடுத்தது தவறா?.. ஓப்பனாக சொன்ன இயக்குநர்! | Karthi Movie Director Open About The Movie


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *