முன்னாள் கணவரின் உறவினர் கண்ணில் சிக்கிய ரோஹினி, மீனாவிடம் சிக்கினாரா?… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் நல்ல நல்ல விஷயங்களாக நடந்து முடிந்தது.
அதாவது ரவி தனது ரெஸ்டாரன்ட் வரவில்லை என்றாலும் கண்டிப்பாக நான் ரெஸ்டாரன்ட் தொடங்குவேன் என அதற்கான வேலைகளை தனியாகவே பார்த்து தொழிலையும் தொடங்கிவிட்டார்.
அந்த விழாவில் ஸ்ருதியின் பெற்றோர்கள் நீதுவை பார்த்து Illegal Affair ஆ என கேட்ட ஒரு விஷயம் தான் சோகமாக முடிந்தது. இன்றைய எபிசோடில், மீனா ஆப் மூலம் தனது பூ தொழிலை முன்னேற்ற ஸ்ருதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
விஜயாவும் மீனா தொழிலில் முன்னேறி வருகிறார் என பாராட்டுகிறார்.
புரொமோ
அடுத்த வரப்போகும் எபிசோடின் புரொமோவில், வித்யா திருமண விசேஷம் வருகிறது. கோவிலில் அவர்களுக்கு திருமணம் நடக்க மீனா-முத்து, ரோஹினி என அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.
அப்போது ரோஹினியின் முன்னாள் கணவர் உறவினர் ஒருவர் அவரை கவனிக்க மீனாவிடம் சென்று கல்யாணி எங்கே என்று கேட்கிறார். அதைக்கேட்டதும் மீனா என்னது கல்யாணியா என முழிக்கிறார்.
ரோஹினியும் முன்னாள் கணவர் உறவினர் கண்ணில் படாதவாரு தப்பிக்க முயற்சிக்கிறார், ஆனால் மாட்டிக்கொள்கிறார்.