முதல்நாள் புக்கிங்கில் மட்டுமே ரஜினியின் கூலி எத்தனை கோடி கலெக்ஷன் தெரியுமா.. செம மாஸ்

கூலி திரைப்படம்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாகப்போகும் படம் கூலி.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, பூஜா ஹெட்ச், ஸ்ருதிஹாசன், அமீர்கான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
பான் இந்திய பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படம் அதிகம் வசூலீட்டும் திரைப்படமாக அமையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையில் இப்படம் தயாராக சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
முதல்நாள்
வரும் ஆகஸ்ட் 14ம் தேதி படம் மாஸாக வெளியாகவுள்ள நிலையில் முன்பதிவு படு வேகமாக நடந்து வருகிறது.
முதல்நாள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் கேரளாவில் ரூ. 3.21 கோடி வசூலித்ததாக தகவல் வந்தன.
தற்போது என்னவென்றால் முதல்நாள் புக்கிங்கில் மட்டுமே உலகம் முழுவதும் படம் ரூ. 50 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக தரமான தகவல் வந்துள்ளது.