மீனாவிடம் பணத்தை வாங்கிக்கொண்டு மயில் அம்மா செய்த வேலை… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
என்னடா இது இப்படி இழு இழு என இழுக்கிறார்களே என இருக்கிறது சரவணன்-மயில் விவாகரத்து பிரச்சனை.
உண்மை தெரிந்தவுடன் பாண்டியன் குடும்பம் மயிலை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பெரிய பிரச்சனை ஆனது. ஜெயிலில் பாண்டியன் குடும்பம் அடைக்கப்பட எப்படியோ வெளியே வந்தார்கள்.
இடையில் கதிர்-ராஜி திருமணம் பற்றிய உண்மை எல்லோருக்கும் தெரியவர பாண்டியன் தனது மனைவி மீது கோபமாகவே உள்ளார். கோமதியும் என்னென்னவோ செய்து பார்க்கிறார், ஆனால் பாண்டியன் கோபம் தனிவதாக தெரியவில்லை.
எபிசோட்
நேற்றைய எபிசோடில், தற்கொலை செய்ய துணிந்த மயிலை காப்பாற்றி மீனா தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரை கண்டதும் செந்தில் செம கோபமாக பேச ஒரு கட்டத்தில் மயில் இருந்தால் நான் இங்கு இருக்க மாட்டேன் என வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
இன்றைய எபிசோடில், மயிலை சமாதானப்படுத்தி மீனா அவரது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். மயிலை கண்டதும் பாக்கியம் இவளுக்கு எல்லாம் வீட்டில் இடம் இல்லை, இங்கே சாப்பாடு ஆக்கிப்போட்டு தங்க வைக்க என்னிடம் வசதி இல்லை என கூறுகிறார்.
மீனா பின் மயிலை சமாதானப்படுத்த அவர் எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடு என்கிறார், அவரும் நான் கண்டிப்பாக ஏற்பாடு செய்கிறேன் என கூறி மயிலிடம் கொஞ்சம் பணம் தருகிறார்.
அதேபோல் மயில் அம்மாவிடமும் மீனா பணம் கொடுத்த அதை அவர் வாங்கிக்கொள்கிறார். இதன்பிறகு கதிர், ராஜியை கோச்சிங் கிளாஸ் அழைத்து செல்கிறார் மொத்த பணத்தையும் கட்டுகிறார்.
கடைசியாக கோமதி அண்ணன்கள் வீட்டில் குமாருக்கு பெண் பார்த்துள்ள விஷயம் பேசப்படுகிறது.






