மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க


நடிகர் ஸ்ரீயை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலமாக பிரபலமாகி அதற்குப் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் அவர். வழக்கு எண் 18/9, மாநகரம், வில் அம்பு போன்ற படங்களில் நடித்தார் அவர்.

அந்த நேரத்தில் பெரிய ஹீரோவாக வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அவர் படங்களில் இருந்து காணாமல் போனார்.

சமீபத்தில் அவர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருந்த புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கவில்லை, சாப்பிட கூட அவருக்கு வழி இல்லை எனவும் செய்திகள் பரவியது.

அதன் பின் ஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ.. என்ன செய்திருக்கிறார் பாருங்க | Actor Sri Is Back Releases A Novel

மீண்டு வந்த நடிகர் ஸ்ரீ


இந்நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீ இதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் தற்போது ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

MAY EYE COME IN? என்ற நாவலை அவர் எழுதி இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *