மீண்டும் சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார்களா?.. இப்படிபட்ட படமா?

மீண்டும் சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார்களா?.. இப்படிபட்ட படமா?


ரெட்ரோ படம்

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு வெற்றிகரமாக படங்கள் இயக்கி கலக்கிக் கொண்டிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் நடிகர் சூர்யாவை வைத்து ரெட்ரோ என்ற படம் இயக்கியுள்ளார், இப்படம் கடந்த மே 1ம் தேதி வெளியாகி மாஸ் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரிலீஸ் ஆகி 6 நாள் முடிவில் படம் இதுவரை மொத்தமாக ரூ. 86 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் கண்டிப்பாக வசூலில் படம் வேறலெவல் மாஸ் செய்யும் என கூறப்படுகிறது.

மீண்டும் சூர்யா-கார்த்திக் சுப்புராஜ் இணைகிறார்களா?.. இப்படிபட்ட படமா? | Is Retro Movie Team Teaming Up Again

அடுத்த படம்


ஒரு படம் ஹிட்டானாலே அந்த படத்தில் நடித்த ஜோடியோ அல்லது இயக்குனர் நாயகன் கூட்டணியோ மீண்டும் அமைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.

அப்படி தற்போது என்ன தகவல் என்றால் மீண்டும் ரெட்ரோ பட கூட்டணி அமைய இருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். சூர்யா சாருக்காக தயாராக இருக்கும் கதை எனது கனவு படம், அதற்கு பெரிய பட்ஜெட் தேவை என கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *