மார்கன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மார்கன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா


மார்கன்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் 1 மற்றும் 2 என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மார்கன். இப்படத்தை அறிமுக இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர்.

வசூல் விவரம்

திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல் நாள் மார்கன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *