மலையாள சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர்.. ஆடு 3 திரைப்படத்தின் வசூல் வேட்டை

மலையாள சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர்.. ஆடு 3 திரைப்படத்தின் வசூல் வேட்டை


ஆடு 3

இவர்களால் மட்டும் எப்படி இந்த மாதிரியெல்லாம் படங்களை கொடுக்க முடிகிறது என்று, மலையாள சினிமா மீது எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.



பிரேமம், ஐயப்பனும் கோஷியும், காதல், பிரமயுகம், சர்வம் மாயா என நம் மனதை தொடும் வகையில் பல விதமான கதைக்களத்துடன் படங்களை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்வார்கள்.

மலையாள சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர்.. ஆடு 3 திரைப்படத்தின் வசூல் வேட்டை | Aadu 3 Movie 7 Days Box Office



அப்படி சமீபத்தில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் ஆடு 3. இதற்கு முன் இப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வசூல் 



ஆடு 3 திரைப்படத்தை இயக்குநர் மிதுன் தாமஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயசூர்யா, விநாயகன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 7 நாட்களை கடந்துள்ளது.

மலையாள சினிமாவின் அடுத்த பிளாக்பஸ்டர்.. ஆடு 3 திரைப்படத்தின் வசூல் வேட்டை | Aadu 3 Movie 7 Days Box Office



இந்த 7 நாட்களில் ஆடு 3 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 7 நாட்களில் ரூ. 105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *