மகேஷ் முகத்திரை கிழிந்தது.. ஆனந்தி அதிர்ச்சி! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

மகேஷ் முகத்திரை கிழிந்தது.. ஆனந்தி அதிர்ச்சி! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ


சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மகேஷுக்கு தெரியவந்துவிட்ட நிலையில் அதற்கு அன்பு தான் காரணம் என நினைத்து அவர் கடும் கோபம் அடைகிறார்.

ஒருகட்டத்தில் அன்புவை கடத்தி சென்று ஒரு இடத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்து வருகிறார் மகேஷ். ஆனால் அன்பு நான் எதுவுமே செய்யவில்லை என சொல்கிறார்.

ஆனந்தி போன் செய்தால் மகேஷ் தான் அன்புவை தேடுவதற்காக போலீஸ் கமிஷனரிடம் பேசி வருவதாக பொய் கூறுகிறார்.

கண்டுபிடித்த ஆனந்தி

அன்புவை தேடி அலையும் ஆனந்தி மகேஷிடம் போனில் பேச மீண்டும் அதே பொய்யை சொல்கிறார் மகேஷ். கமிஷ்னர் ஆபிசில் இருப்பதாக மகேஷ் சொன்ன நிலையில் அவர் மார்க்கெட்டில் இருந்து வெளியில் வருவதை ஆனந்தி பார்த்துவிடுகிறார்.



அதன் பின் அவரை பின்தொடர்ந்து சென்று அன்புவை அவர் கட்டி வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார் ஆனந்தி.

ப்ரோமோவை பாருங்க.. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *