மகேஷ் பாபு படத்தில் அந்த காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குநர்.. மன்னிக்கவே மாட்டேன் என கூறிய நடிகை ராசி

நடிகை ராசி
90ஸ் காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ராசி. குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்தார்.
தமிழில் லவ் டுடே, ரெட்டை ஜடை வயசு, தேடினேன் வந்தது, பிரியம் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இந்த சமயத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் உருவான நிஜம் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார் நடிகை ராசி.
இவர் அப்படத்தில் வில்லனின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில், இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராசி பேசியுள்ளார்.
வற்புறுத்திய இயக்குநர்
இதில் அவர் கூறுகையில், “நான் நிஜம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற முதல் நாளே, எனக்கு விருப்பம் இல்லாத காட்சியில் நடிக்க இயக்குநர் தேஜா சொன்னார். அந்த காட்சி உண்டு என அவர் என்னிடம் அதற்கு முன் சொல்லவில்லை. படத்தில் நடித்தால் என் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் என உணர்ந்தேன்.
ஆனால், இயக்குநர் என்னை நடிக்க வேண்டும் என கூறினார். அதனால் நான் விருப்பம் இல்லாமல் நடித்தேன். டப்பிங்கின்போது இயக்குநர் தேஜா எனக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார். இருப்பினும், நான் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். நான் எந்த இயக்குநரை மறக்க விரும்புகிறேன் என்று கேட்டால்? தேஜாவின் பெயரைத்தான் சொல்வேன்” என நடிகை ராசி கூறியுள்ளார்.