மகாராஜா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.. அட இவரா

மகாராஜா
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் மகாராஜா.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, சிங்கம்புலி, நட்டி நட்ராஜ் என பலரும் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்தது.
இப்படத்தில் மிகவும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சிங்கம் புலி. அவர் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் அப்புக்குட்டி தானாம். இதுகுறித்து நடிகர் அப்புக்குட்டி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அப்புக்குட்டி ஓபன் டாக்
“மகாராஜா படத்துல சிங்கம்புலி அண்ணன் நடிச்ச கதாப்பாத்திரத்தை இயக்குநர் முதலில் என்னிடம்தான் கூறினார். நான் தயாராகிட்டு இருந்தப்போ, திடீர்னு அந்த கதாபாத்திரத்துக்கு என்னை விட உடல் ரீதியா சிங்கம்புலி அண்ணன் சரியா இருப்பார்னு அவர போட்டுட்டாங்க. ஆனா அந்த படத்துல சிங்கம்புலி அண்ணன் நல்லா நடிச்சுருப்பாரு, என்ன விட அவருக்கு அந்த ரோல் செட் ஆகிருச்சு” என கூறியிருக்கிறார்.