மகாநதி சீரியலில் இருந்து கம்ருதீன் நீக்கப்பட்டாரா? உண்மையை சொன்ன சீரியல் குழு

மகாநதி சீரியலில் இருந்து கம்ருதீன் நீக்கப்பட்டாரா? உண்மையை சொன்ன சீரியல் குழு


விஜய் டிவியின் மகாநதி சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வந்த கம்ருதீன் பிக் பாஸ் 9ம் சீசன் போட்டியாளராக சென்றதால், சீரியலில் அந்த கதாபாத்திரம் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவது போல காட்டப்பட்டது.

கம்ருதீன் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டு இருக்கிறார். மேலும் இணையத்திலும் அவரை பற்றி கடுமையான ட்ரோல்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.

மகாநதி சீரியலில் இருந்து கம்ருதீன் நீக்கப்பட்டாரா? உண்மையை சொன்ன சீரியல் குழு | Is Bigg Boss Kamarudin Removed From Mahanadhi

மகாநதி சீரியலில் நீக்கப்பட்டாரா?

இந்நிலையில் கம்ருதீன் மகாநதி சீரியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் சீரியல் குழு, “அவர் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு நாள் இருப்பார் என தெரியாது. அதனால் கம்ருதீனுக்கு பதில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என முன்பே விஜய் டிவியுடன் பேசினோம். தற்போது தான் அவர் நீக்கப்பட்டது போல பேசுகிறார்கள்” என தெரிவித்து இருக்கின்றனர். 

அந்த ரோல் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டது போல காட்டப்பட்டு இருக்கிறது. மீண்டும் அந்த ரோல் வருமா என கதை தான் முடிவு செய்யும் எனவும் கூறி இருக்கின்றனர்.

மகாநதி சீரியலில் இருந்து கம்ருதீன் நீக்கப்பட்டாரா? உண்மையை சொன்ன சீரியல் குழு | Is Bigg Boss Kamarudin Removed From Mahanadhi


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *