ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் பல கோடி லாபம் பெற்ற காந்தாரா Chapter 1… எவ்வளவு தெரியுமா?

ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் பல கோடி லாபம் பெற்ற காந்தாரா Chapter 1… எவ்வளவு தெரியுமா?


காந்தாரா 

கன்னட சினிமா அடுத்தடுத்து பான் இந்திய படங்கள் தயாரித்து அதில் வெற்றியும் கண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிட்டார்கள்.

அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று தான் காந்தாரா. கடந்த 2022ம் ஆண்டு ரூ. 15 கோடிக்கும் மிகவும் குறைவான பட்ஜெட்டில் தயாராகி வெளியான காந்தாரா திரைப்படம் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்தது.


எனவே தற்போது தயாராகி வரும் அடுத்த பாகத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள்.

ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் பல கோடி லாபம் பெற்ற காந்தாரா Chapter 1... எவ்வளவு தெரியுமா? | Kantara Chapter 1 Pre Release Profit

வியாபாரம்


தற்போது ரிஷப் ஷெட்டி இரண்டாம் பாகத்தை ரூ. 100 முதல் ரூ. 120 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார்.

படத்தின் வியாபாரம் குறித்து சூப்பரான தகவல்கள் வந்துள்ளன. அதாவது காந்தாரா Chapter 1 படத்தின் போஸ்ட்-தியேட்டர் ஸ்ட்ரீமிங் உரிமைகளை 2024-ல் அமேசான் பிரைம் வீடியோ 125 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் பல கோடி லாபம் பெற்ற காந்தாரா Chapter 1... எவ்வளவு தெரியுமா? | Kantara Chapter 1 Pre Release Profit

படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளதாம், ரூ. 80 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு திரையரங்க உரிமை ரூ. 100 கோடிக்கும், தமிழ்நாட்டு உரிமை ரூ. 32 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *