ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்ட தொடங்கிய ரஜினியின் கூலி படம்… இதுவரை செய்த கலெக்ஷன்

கூலி படம்
தமிழ் சினிமாவில் 2025ம் வருடம் ஆரம்பித்ததில் இருந்து நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளது.
பெரிய பட்ஜெட் படங்கள் தான் வெற்றிப்பெறும் என்றில்லாமல் சிறந்த கதைக்களம் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி வெளியான படங்களும் மக்களின் வரவேற்பை பெற்றது.
இப்போது அடுத்து தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது.
ப்ரீ புக்கிங்
சன் பிக்சர்ஸ் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் படு மாஸாக நடந்தது, இதில் ரஜினி கொடுத்த ஸ்பீச் படு வைரலானது.
படம் ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் நிலையில் ப்ரீ புக்கிங் மாஸாக நடந்து வருகிறது. ரஜினியின் கூலி படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.