பைக்கர்: திரை விமர்சனம்

பைக்கர்: திரை விமர்சனம்


டாக்டர்.ராஜசேகர், ஷர்வானந்த் நடிப்பில் வெளியாகியுள்ள பைக்கர் தெலுங்கு திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review

கதைக்களம்



2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் கதையில் விகாஸ் நாராயண் (ஷர்வானந்த்) Motokart நடத்தி வருகிறார்.

காதல் மனைவி அனன்யா (மாளவிகா நாயர்), பள்ளியில் படிக்கும் மகன் இஷான் என நல்ல குடும்ப வாழ்க்கையில் விகாஸ் பயணிக்கிறார்.


ஒருநாள் பள்ளியில் தன் அப்பாவைப் பற்றி இஷானின் வகுப்பு மாணவன் தவறாக பேச அவனை அடித்து விடுகிறான்.

இது விகாஸிற்கு தெரிய வர மகனை விசாரித்து பின் ‘அடிப்பதை விட, இன்னொரு முறை அப்படி பேச நாம் இடம் தரக் கூடாது’ என்று அறிவுரை கூறுகிறார்.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review

அதே சமயம் ING நிறுவனத்திற்கு மோசடி செய்துவிட்டதாக சுனில் நாராயண் (டாக்டர். ராஜசேகர்) வெளியேற்றப்படுகிறார்.

அதனை அறியும் விகாஸ் தன் அப்பாவின் மானத்தைக் காப்பாற்ற பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Motocross ரேஸிற்கு செல்கிறார்.



அதில் அவர் வெற்றி பெற்றாரா? மகன் மேல் கோபத்தில் இருக்கும் சுனில் அவரை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதக்கதை.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review

படம் பற்றிய அலசல்



ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களில் பெரிதாக காட்டப்படாத Motocross பைக் ரேஸ் விளையாட்டினை திரையில் அற்புதமாக கொண்டுவந்துள்ளார் இயக்குநர் அபிலாஷ் ரெட்டி.

இதுபோன்ற ஜானரில் வழக்கமாக காட்டப்படும் ஹீரோ தோல்வியடைந்து, பின் மீண்டும் களத்திற்கு வந்து ஜெயிப்பது போன்ற காட்சிகள் இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியால் விறுவிறுப்பாகவே படம் நகர்கிறது.



அப்பா, மனைவி, மகன் என சென்டிமென்ட் காட்சிகள் படம் முழுவதும் இருந்தாலும், அவை எதுவும் கதையை பாதிக்காத வகையிலும், ஓவர்டோஸ் ஆகாதபடியும் பரத்வாஜ், ஷ்ரவன் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளார் அபிலாஷ் ரெட்டி.ஆங்காங்கே வரும் உணர்ச்சிமிகு வசனங்கள், அதற்கு ஏற்றாற்போல் போல் வரும் காட்சிகள் என படம் நெடுகிலும் மோட்டார் ரைடுதான்.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review



குறிப்பாக ‘பயங்கறதுதான் தோல்வி காரணம்; அதே பயம்தான் வெற்றிக்கு ஆயுதம்’, ‘நீ முன்னாடி வரல..எல்லோரும் உன் பின்னாடி வந்தாங்க; ரெண்டுத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’ போன்ற வசனங்கள் மிரட்டல்.


அதேபோல் Block Pass வரும் இடம், Mountain Jump எல்லாம் கூஸ்பம்ப் ரகம்.

நடிகர்களை பொறுத்தவரை ஷர்வானந்த் ரேஸராகவே வாழ்ந்துள்ளார். அந்தளவு உடலுழைப்பை காட்டியுள்ளதுடன் முகபாவனைகளில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review



ஒரு காட்சியில், அப்பா ராஜசேகரிடம் கோபப்பட்டு Angry Man பட்டம் உங்களுக்கு மட்டும் இல்ல என்று கூறி ஷர்வானந்த் டீஸ் செய்கிறார். அது தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகும்.

என்னதான் ஹீரோவின் அப்பாவாக ராஜசேகர் நடித்திருந்தாலும் எங்குமே தனக்கான மாஸை அவர் விட்டுக்கொடுக்கவில்லை.


அதுல் குல்கர்னியிடம் உதவி கேட்பதுபோல் சென்று அவருக்கே ஆஃப்பர் கொடுப்பது, மகனை கடிந்து கொண்டாலும், பேரனின் பாசத்தில் உருவாகுவது என படம் முழுக்க அவரும் ஸ்கோர் செய்கிறார்.

அழகு பதுமையாக அறிமுகமாகும் மாளவிகா நாயர் ரொமான்ஸைக் காட்டியிலும், எமோஷனல் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்.

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review

கார்ப்பரேட் வில்லனாக அதுல் குல்கர்னி வழக்கம்போல் வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

படத்திற்கு மற்றொரு தூண் ஜிப்ரானின் இசைதான். படம் முழுக்க பின்னணி இசையில் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.

J.யுவ்ராஜின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. கிளைமேக்ஸ் காட்சி அல்டிமேட். அனில் குமாரின் படத்தொகுப்பு சிறப்பு. 

க்ளாப்ஸ்



ராஜசேகர், ஷர்வானந்த்

பைக் ரேஸ் காட்சிகள்



வசனங்கள்



பின்னணி இசை



பல்ப்ஸ்



பெரிதாக ஒன்றுமில்லை



மொத்தத்தில் இந்த பைக்கர் பார்வையாளர்களை கவரும் ரேஸில் ஜெயித்துவிட்டான். கண்டிப்பாக பெரிய திரையில் தவறவிடக்கூடாத படம். 

பைக்கர்: திரை விமர்சனம் | Biker Movie Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *