பெண்களுக்கு மட்டும் அது அவமானமா.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காட்டமான பதிவு

பெண்களுக்கு மட்டும் அது அவமானமா.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காட்டமான பதிவு


விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபத்தில் அந்த தொடர் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பிறகு அவர் புது தொடர் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது காட்டமாக ஒரு பதிவை அவர் இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு என்ன ஆனது என கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு மட்டும் அது அவமானமா.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் காட்டமான பதிவு | Baakiyalakshmi Kambam Meena Sellamuthu Angry Post

பெண்களுக்கு மட்டுமே அவமானமா..

ஒரு ஆழ்ந்த, தொடர்ச்சியான துரோகத்திற்கு பிறகு மனதில் ஏற்படும் விரக்தி புரியவைக்க இயலாத வலி… துரோகம் செய்பவர்களுக்கு யார் மீது வேண்டும் என்றாலும் காதல், காமம் தோன்றும். அவர்களுக்கு அது நிலையான உணர்வு இல்லை.

மிருகம் எங்கு உணவு கிடைத்தாலும் போகும். எதை வேண்டும் என்றாலும் திங்கும். . அனைத்தையும் மறுத்த நிலையில் அவர்கள் வேண்டுவது ஒரு அமைதியான பிரிவை மட்டும்.

அனைத்து மனிதர்களுக்கும் தனித்து வாழும் உரிமை உண்டு. ஆனால் அது பெண்களுக்கு மட்டும் அவமானத்தின் அடையாளமாய் மாற்றப்பட்டுவிட்டது.

துரோகம், இழிவான செயல் அனைத்தையும் செய்துவிட்டு மன்னிப்பு என்று கேட்டவுடன் மன்னிக்கவில்லை என்றால் அவள் தான் சரியில்லாதவள் என்கிறது சமூகம்.

கம்பம் மீனா செல்லமுத்து யாரை பற்றி இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார் என நெட்டிசன்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *