புது வரவல்ல இது, புது உறவு.. ரோபோ ஷங்கர் மனைவி பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ

புது வரவல்ல இது, புது உறவு.. ரோபோ ஷங்கர் மனைவி பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ


 ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். விஜய் டிவியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து, இன்று வெள்ளித்திரையில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

புது வரவல்ல இது, புது உறவு.. ரோபோ ஷங்கர் மனைவி பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ | Robo Shankar Grand Son Video

இவருடைய மகள் இந்திரஜா ஷங்கர், தளபதி விஜய்யின் பிகில் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், அதன்பின் இவர் படங்கள் நடிக்கவில்லை.

தனது மாமாவான கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்ட இந்திரஜா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

புது வரவல்ல இது, புது உறவு.. ரோபோ ஷங்கர் மனைவி பகிர்ந்த எமோஷ்னல் வீடியோ | Robo Shankar Grand Son Video

இதனால் ரோபோ ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் என அனைவரும் மகிழ்ச்சியில் வலம் வந்ததை நம்மால் காண முடிந்தது.

எமோஷனல் வீடியோ 

இந்நிலையில், ரோபோ ஷங்கர் மனைவியான பிரியங்கா சங்கர் தன்னுடைய பேரனை கையில் வைத்து ஆட்டிக் கொண்டே தூங்க வைக்கும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு உணர்ச்சிபூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” புது வரவல்ல இது, புது உறவு ஏங்கி இருந்த கைகளுக்கு உன்னை ஆர தழுவ ஆசை வந்ததடா என் அன்பு பேரனே” என்று பதிவிட்டுள்ளார்.   

 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *