புதிய Projectல் கமிட்டாகியுள்ள பாக்கியலட்சுமி சீரியல் புகழ் சுசித்ரா.. நியூ லுக்கில் நடிகை போட்டோ

பாக்கியலட்சுமி
சீரியல்கள் பார்க்கும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவந்த தொடர் பாக்கியலட்சுமி.
விஜய் டிவி கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான்.
பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்த சீரியல் ஹிந்தி மற்றும் தமிழில் தான் நீண்ட வருடங்களாக ஓடிக் கொண்டிருந்தது, தற்போது தமிழில் முடிவுக்கும் வர உள்ளது.
நிதிஷை கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதோடு இனியா-ஆகாஷ் திருமணத்துடன் சீரியல் முடிவுக்கு வருகிறது.
புதிய லுக்
பல வருடங்களாக ஓடிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சீரியல் தனது கடைசி வாரத்தை நெருங்கிவிட்டது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த சுசித்ரா புதிய Projectல் கமிட்டாகி இருக்கிறார்.
அதற்காக நியூ லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பகிர அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.