புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்… எந்த டிவி தொடர்…

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்… எந்த டிவி தொடர்…


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகம் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு கதையாக ஒளிபரப்பாகி வந்தது. 

அதில் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைத்தது, இப்போது பலர் சினிமாவில் படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்கள்.

முதல் பாகம் முடிந்த கையோடு அதே வேகத்தில் 2வது பாகம் தொடங்கப்பட்டது. 2023ம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வது பாகம் தொடங்கப்பட்டது, அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் கதையாக தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்... எந்த டிவி தொடர்... | Pandian Stores 2 Actor Committed In New Serial

புதிய சீரியல்

இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஆரம்பத்தில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வசந்த் வசி. ஆரம்பத்தில் நடித்து வந்தவர் சில காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

அதன்பிறகு வசந்த் வசி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வந்தார், ஆனால் கடைசி வரை வரவில்லை.

இந்த நிலையில் வசந்த் வசி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். ஆனால் சீரியல் குறித்து வேறொரு தகவலும் வெளியாகவில்லை.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகர்... எந்த டிவி தொடர்... | Pandian Stores 2 Actor Committed In New Serial


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *